நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் ‛மாமனிதன்'. முதன்முறையாக இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். யுவனே தயாரித்துள்ளார். நீண்டகால தயாரிப்பாக இருந்த இந்த படம் சில வெளியீட்டு தேதி மாற்றத்திற்கு பின் இப்போது ஜூன் 24ல் வெளியாக உள்ளது. தமிழ், மலையாளத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் இந்த படத்தை வெளியிடுகிறார். இதுதவிர கன்னட மொழியிலும் இந்த படம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கான புரொமோஷன் பணிகள் துவங்கிவிட்டன. இந்நிலையில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து சீனுராமசாமி மரியாதை செய்தார். அதேப்போன்று நடிகர் சிவாஜியின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதுபற்றி சீனுராமசாமி கூறுகையில், ‛‛மாமனிதன் திரைப்படத்தின் வருகையையொட்டி என் கலை உணர்ச்சியின் தூண்டாமணி விளக்குகள், தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் முத்தழிழ் அறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இம்மூவருக்கும் மலர் மரியாதை செய்தேன்'' என பதிவிட்டுள்ளார்.