பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வேங்கை, குட்டி ஆகிய படங்கள் வெளியாகி பாடல்கள் வெற்றி பெற்றன. தற்போது நீண்ட வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.