மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள படம் 'ஹிட்லர்'. இதில் அவருடன் ரியா சுமன், கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார், நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா, சஞ்சய்குமார் தயாரித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் தனா கூறியதாவது: ஹிட்லர் என்றாலே சர்வாதிகாரம்தான் நினைவுக்கு வரும். நாட்டில் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு சர்வாதிகாரம்தான் நடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஹிட்லர் இருக்கிறார். இவற்றை எதிர்த்து போராடும் ஒரு சாதாரண மனிதனின் கதை இது. இந்த படத்தில் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் பெண்ணாக ரியா சுமன் நடித்துள்ளார். அவரது கேரக்டர் பெயர் சாரா. முதலில் சாரா கேரக்டரில் வேறொரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். பின்னர் அவர் நடிக்க மறுத்து வெளியேறினார். தனது சொந்த காரணங்களுக்காக அவர் வெளியேறினார். அவர் யார் என்பதையும், என்ன காரணம் என்பதையும் சொல்வது நாகரீகமல்ல. அதன்பிறகு தான் ரியா சுமனை அணுகி கேட்டோம். அவர் உடனே ஒப்புக் கொண்டு இரண்டு நாளிலேயே படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார். நன்றாக நடித்தும் கொடுத்தார். என்றார்.