'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
தென்னிந்திய மொழிகளிலிருந்து தயாராகும் சில படங்கள் கடந்த சில வருடங்களில் பான் இந்தியா அளவில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளன.
'பாகுபலி 1 - 2, கேஜிஎப் 1 - 2, புஷ்பா 1, காந்தாரா' ஆகிய படங்கள் வட இந்திய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. தற்போது அந்த வரிசையில் தெலுங்கில் தயாராகி வெளிவந்துள்ள 'ஹனு மான்' படம் சேரும் என்கிறார்கள்.
இப்படத்தின் முதல் 3 நாள் ஹிந்தி வசூல் மட்டும் 12 கோடியைக் கடந்துள்ளதாம். 'கேஜிஎப் 1, காந்தாரா' படங்களின் வசூலை விட அதிகமாகவும், புஷ்பா 1 படத்திற்கு இணையாகவும் உள்ளதாக பிரபல பாலிவுட் விமர்சகர் தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் ராமர், ஹனுமான் சக்தியைப் பற்றிய பேன்டஸி படமாக வெளிவந்துள்ள 'ஹனு மான் படம் பெரிய வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.