புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
கலைமகளின் வீணை வாசிப்பு கேட்டுக்கொண்டே பிரம்மன் இவரின் குரலைப் படைத்திருப்பானோ... மயிலிறகு வருடல்களை வார்த்தைகளாக்கினால் இவரின் குரலாகுமோ என வியப்பூட்டும் மெல்லிய இன்னிசை குரலரசி, சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களின் குரலுக்கு சொந்தக்காரி இந்த அக் ஷயா...
எதற்கும் துணிந்தவன் பட நாயகி பிரியங்கா மோகன், அக்னி சிறகுகள் அக் ஷரா ஹாசன், நிக்கி கல்ராணி, நதி மற்றும் அலாவுதீனும் அற்புத விளக்கு படங்களில் -கயல் ஆனந்தி, ஷிரின் காஞ்ச்வாலா போன்ற வெள்ளித்திரை கதாநாயகிகள் முதல் ரோஜா, சத்யா, ஈரமான ரோஜா, கோகுலத்தில் சீதை என ஏராளமான சின்னத்திரை சீரியல்கள் வரை பலரது குரலாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் அக் ஷயா தினமலர் வாசர்களுக்காக பகிர்ந்து கொண்டது.
இந்த துறையில் ஆரம்பம் எப்படி
வளர்ந்தது, படித்தது சென்னை. அம்மா மலர்கொடி டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதால் பள்ளியில் படிக்கும்போதே இந்த துறைக்கு வந்தாச்சு. குழந்தை நட்சத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறேன்.
சீரியலுக்கும், படங்களுக்கும் உள்ள வேறுபாடு...
சீரியலில் ஒரு எபிசோடில் 4 சீன்கள் பண்ணுவது போல் இருக்கும். படம் என்றால் மொத்தமாகவே 4 சீன்கள் இருப்பதாக ரோல்களும் அமையும். இதுபோல் நிறைய வித்தியாசம் இருக்கு. அனுபவமே ஆசானாக உள்ளது.
எமோஷன்களுக்கு ஏற்றவாறு குரலை எப்படி மாற்ற முடிகிறது...
நிறைய எமோஷன்கள் இருக்கும். அதற்கேற்ப மாறி, மாறி உள்வாங்கி கொள்வது அவசியம். நான் சோகமா இருந்தாலுமே மகிழ்ச்சியான சீன் என்றால் மகிழ்ச்சியாக மாற வேண்டியது கட்டாயம். சிரமத்தைப் பாராமல் அதுதான் என் வேலை என புரிந்து கொண்டு பயணிக்கிறேன்.
குரல் வளத்தை எப்படி பாதுகாக்கிறீர்கள்...
கடவுள் கொடுத்த பரிசு தான். தனியாக டிரீட்மென்ட் எடுப்பதில்லை. ஆரம்பத்தில் குளிர்ச்சியான பொருட்களை தவிர்ப்பது வழக்கம். தற்போது எது எடுத்துக் கொண்டாலும் எப்படி கையாள வேண்டுமென்பதை கற்றுக்கொண்டேன். டப்பிங் பண்றதுக்கு முன்னாடி ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிட மாட்டேன்.
யாருக்கு வாய்ஸ் கொடுக்க ஆசை...
ஆரம்பத்தில் இதுபோன்ற ஆசைகள் இருந்தது. வாய்ப்புகள் வர, வர கொடுத்த ரோலை சிறப்பாக செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அங்கீகாரம் கிடைக்கிறதா...
பேசும் கேரக்டர்கள் பேசப்பட ஆரம்பித்தபின் அடையாளம் கண்டு பிடித்து விடுகின்றனர். திரைக்கு பின்னால் இருந்தாலும் அங்கீகாரம், வரவேற்பு கிடைப்பதில் மகிழ்ச்சி.
இன்ஸ்பிரேஷன் யார்...
அம்மா மலர்கொடியும், அப்பா பிரபாகரும். அம்மா பின்னணி குரலில் சாதிக்க நினைச்சாங்க. அப்போ அங்கீகாரம் கிடைக்கல. நான் பேசப்படுவது அம்மாவுக்கானது. எப்படி வாழ வேண்டும், பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என கற்றுக்கொடுத்தது அப்பா தான். அக் ஷயா எனும் பின்னணி குரலை தேடுவோர் இருக்கும் வரை என் பெற்றோரின் பெயரும் இருக்கும்.
திரைக்கு முன்னால் எப்போது...
அதற்கும் வாய்ப்பு வந்தது. இப்போதைக்கு ஐடியா இல்ல.
பிட்னஸ், பியூட்டி ரகசியம் ...
உடலை பராமரிப்பது நல்ல உத்வேகத்தை கொடுக்கும். உணவு கட்டுப்பாடு போன்ற விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன்.
பெண்களுக்கு சொல்வது...
என்ன வேண்டுமென்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் உண்மையாக உழைத்தால் உங்களுக்கானது வந்து சேரும்.