‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சிந்து சமவெளி, மைனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் அமலா பால். அதன்பிறகு ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்த போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டார்கள். என்றாலும் சில ஆண்டுகளிலேயே அவர்கள் விவாகரத்துப் பெற்ற நிலையில் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் அமலா பால்.
அதோடு தனது கிளாமர் வீடியோ புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்த அமலாபால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகத் ஜோசப் என்ற தனது பாய் பிரண்டை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அமலாபால். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ‛‛இப்போது நான் மட்டுமல்ல எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்'' என்று கூறி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டு இருக்கிறார் அமலாபால்.




