விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‛தி கோட்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் யுவனின் இசையில் இளையராஜா, விஜய்யை இணைத்து ஒரு பாடலை பின்னணி பாட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறதாம். தற்போது இந்த பாடலுக்கான கம்போசிங் பணிகளை யுவன் சங்கர் ராஜா முடித்து விட்ட நிலையில், பாடலை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதி உள்ளார். விரைவில் ரெக்கார்டிங் நடைபெறவுள்ளது.