'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் படப்பிடிப்பு, சுற்றுலா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் என வருடத்தில் பல நாட்கள் விமானத்தில் பறந்தபடியே தான் இருப்பார்கள். அந்த வகையில் பெரும்பாலான பயணங்கள் சுகமான அனுபவங்களாக அமைந்து விட்டாலும் ஒரு சில நேரம் மறக்க முடியாத கசப்பான அனுபவத்தையும் அவை கொடுப்பதுண்டு. இது குறித்து பல பிரபலங்கள் அவ்வப்போது தங்களது கசப்பான விமான பயணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டும் உள்ளனர். இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
சமீபத்தில் ஜெய்ப்பூர் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த மாளவிகா மோகனனுக்கு விமான பணியாளர்களின் சேவை ரொம்பவே மனம் நோகும்படி அமைந்துவிட்டது. இந்த அனுபவம் குறித்து அவர் சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “இண்டிகோ விமானத்தில் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் மோசமான சேவை கிடைத்தது. மேலும் பணியாளர்களின் மோசமான நடத்தையும் கூட” என்று குறிப்பிட்டுள்ளார்.