'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' |

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் படத்தில் அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகராக மாறிய சரத்குமார் வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த அப்போது வரவில்லை.
தற்போது சென்னை திரும்பி உள்ள சரத்குமார், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‛‛விஜயகாந்த் முழுமையாக குணமாகி வருவார் என நம்பினேன். அவர் மறைந்த நாளை கருப்பு தினமாகவே கருதுகிறேன். தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு தந்தார். தனக்கு போட்டியாக வந்துவிடுவேன் என கருதாமல் தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் என்னை நடிக்க வைத்தார். விஜயகாந்த்தின் சிறந்த பண்புகள், குணாதிசயங்களை நாம் பின்பற்ற வேண்டும்'' என்றார்.