ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கிட்டத்தட்ட 49 படங்களில் நடித்து முடித்து விட்ட நடிகர் தனுஷ் ஏற்கனவே 'ப பாண்டி' என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறினார். அதன்பிறகு சிறிய இடைவெளிவிட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதோடு தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இதற்கு பெயரிட்டுள்ளனர்.
தனுஷின் இயக்கம் பற்றி நடிகர் எஸ்.ஜே..சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், “அவரு சூப்பர் டைரக்டரும் கூட... தனுஷுக்கு டைரக்ஷன் மேல என்ன வெறி ! என்ன அர்ப்பணிப்பு ! அவர் வேற லெவல். தனுஷ் 50வது படத்தின் கதையும் வித்தியாசமான ட்ரீட்மென்ட்டும் சர்வதேச தரத்தில் இருக்கிறது. அவரது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார்.