நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோனை ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள். ஆனால் மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே போய் சன்னி லியோனின் முழு நடிப்புத்திறமையையும் வெளிக்கொண்டுவரும் விதமாக அவரை கதாநாயகியாக்கி அழகு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் ஏற்கனவே ரங்கீலா, ஷீரோ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் சன்னி லியோன்.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகும் 'பான் இந்தியன் சுந்தரி' என்கிற வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சன்னி லியோன். பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலுமே இவர் பிரபலமானவர் என்பதால் இந்த வெப்சீரிஸுக்கு பொருத்தமாக இந்த டைட்டிலை வைத்துள்ளார்கள் போலும். இந்த வெப் சீரிஸில் சன்னி லியோன் ஒரு நடிகையாகவே நடிக்கிறார். இந்த வெப்சீரிஸை இயக்குனர் சதீஷ்குமார் இயக்குகிறார்.