ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகை லீலாவதி. சுமார் 600 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் அவள் ஒரு தொடர்கதை, பட்டினத்தார், நான் அவனில்லை, வளர்பிறை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
85 வயதான லீலாவதி தன்னுடைய மகன் வினோத் ராஜுடன், பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி மலைப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லீலாவதி மரணத்திற்கு கன்னட திரை உலகினர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.