குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
எண்பதுகளில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து, கதாநாயகிகளுக்கு மட்டுமல்ல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் கூட சவால் விட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. கடந்த 1996ல் தற்கொலை செய்து இவர் மரணித்தது திரையுலகினருக்கு மட்டுமல்ல இவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.
அதன்பிறகு சில்க் ஸ்மிதா பற்றிய கதைய அம்சத்துடன் சில படங்கள் வெளியாகின. குறிப்பாக 2011ல் பாலிவுட்டில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான 'தி டர்ட்டி பிக்சர்' படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவானது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வித்யா பாலனுக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.
இந்த நிலையில் தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு புதிய படமாக உருவாகிறது. படத்திற்கு 'சில்க் ஸ்மிதா ; தி அன்டோல்ட் ஸ்டோரி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதாவின் 63 வது பிறந்தநாளான நேற்று இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் சோசியல் மீடியா புகழ் சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் சில்க் ஸ்மிதா போன்ற உருவத்தோற்றம் கொண்டவர் என்பதால் அவரையே இந்த படத்தின் கதாநாயகியாக மாற்றி விட்டார்கள். ஜெயராம் என்பவர் இயக்கும் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகும் விதமாக தயாராகிறது.