கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் திரைக்கு வந்து நேற்றோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தது. அதனால் அப்படம் குறித்த பல பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் மாநாடு படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள பதிவுக்கு, ‛லூப் தொடர்கிறது' என்று ஒரு பதில் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து, மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு-2 படத்தை அதே லூப் கதையில் இயக்கப் போகிறார் என்று சிம்புவின் ரசிகர்களும், தற்போது விஜய் நடித்து வரும் 68-வது படத்தையும் மாநாடு படத்தைப் போலவே லூப் கதை அம்சத்தில் தான் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார், அதைத்தான் இப்படி லூப் தொடர்கிறது என்று அவர் பதிவிட்டிருக்கிறார் என விஜய் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.