வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகரும் நடிகர் ரஜினிகாந்தின் நண்பருமான மோகன்பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு தற்போது கண்ணப்பா என்கிற படத்தை தயாரித்து, ஹீரோவாக நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல இன்னும் மற்ற திரையுலகங்களை சேர்ந்த முன்னணி நடிகர்களும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்த வகையில் மலையாளத்திலிருந்து மோகன்லாலும், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் நட்பு ரீதியாக சில நிமிடமே வந்து போகும் காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றனர். படத்தின் வெற்றிக்கும் அது பக்கபலமாக அமைந்தது. அதே பாணியில் கண்ணப்பா திரைப்படத்தின் வெற்றிக்கும் இந்த கூட்டணி உதவும் என எதிர்பார்க்கலாம்.
பாலிவுட் நடிகை கங்கனாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.




