பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து ஆபாசமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்திலும் அது தொடர்பாக புகார் அளித்தார். அதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேசமயம் மணிப்பூரில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட போது நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என்று சோசியல் மீடியாவில் குஷ்புவை நோக்கி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி, கொச்சையான வார்த்தை பிரயோகம் செய்தார்கள். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக, உங்களைப் போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது. மணிப்பூர் விவாகரத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கவனித்து பாருங்கள் என்று பதிவிட்டிருந்தார் குஷ்பு.
அந்த பதிவில் அவர் சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. பலரும் குஷ்புவை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தி உள்ளார்கள்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த எதிர்ப்புகளை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. நான் கிண்டலுடன் பதிவிட்ட பதிவு அது. அதோடு சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் நேசிப்பவர் என்று அர்த்தம். நான் அன்பை பகிர்ந்து கொள்வதற்காக கிண்டலாக அந்த வார்த்தையை பதிவிட்டு இருந்தேன். நான் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன் நிற்க கூடியவள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் குஷ்பு.