அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சிவாஜி கணேசன், ராதா மற்றும் பலர் நடித்து 1985ம் ஆண்டு வெளிவந்த படம் 'முதல் மரியாதை'. எத்தனையோ படங்களில் சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதுவரை பார்த்திராத சிவாஜியின் யதார்த்தமான நடிப்பை அந்தப் படத்தில் பலரும் வியந்து ரசித்தார்கள்.
'துருவ நட்சத்திரம்' படம் பற்றிய சந்திப்பின் போது 'எந்த பழைய படத்தை மீண்டும் செய்ய ஆசை' என்ற கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் 'முதல் மரியாதை' படத்தை ரீமேக் செய்ய ஆசை' என்று பதிலளித்தார். சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு 'கமல்ஹாசன்' என சட்டென்று கூறினார். ராதா கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்விக்கு பிறகு சொல்கிறேன் என்றவர், கடைசி வரை சொல்லவேயில்லை.
கிராமத்துக் கதைகளை படமாக்குவதில்லையே என்ற மற்றொரு கேள்விக்கு, “வெந்து தணிந்தது காடு” படத்தில் கூட ஆரம்பத்தில் சில கிராமத்துக் காட்சிகள் இருக்கும். ஆனால், பலரும் ஏன் அப்படியெல்லாம் எடுக்கிறீர்கள் என்று கேட்டனர். அந்தக் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் மைனஸ் ஆக அமைந்துவிட்டதோ என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் 'அர்பன்' டைப் படங்களை எடுக்கவே பலரும் விரும்புகிறார்கள் போலிருக்கிறது. எனக்கும் ஒரு கிராமத்துப் படத்தை எடுக்க ஆசைதான்,” என்றார்.