அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தானும் ஒரு ஹீரோ என்கிற அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து படங்களில் நடித்து வந்தார் எஸ்ஜே சூர்யா. ஆனால் மாநாடு படத்தில் வில்லனாக அவர் நடித்ததை தொடர்ந்து ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு பலமடங்கு உயர்ந்தது. தொடர்ந்து டான், மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தான் நடிக்கும் படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
தமிழை தாண்டி ஏற்கனவே தெலுங்கில் நுழைந்து படங்களில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார். மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் அவரது 251வது படத்தில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஜீபூம்பா என்கிற படத்தை இயக்கிய ராகுல் ராமச்சந்திரன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.