லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே சரியான பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். அவரது ஆதர்ச நடிகரான விஜய் கூட அவருக்கு ஆதரவு தராத நிலையில் அவரால் ஆரம்ப கட்டத்தில் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன், அவரது டைரக்சனில் நடிக்க முன்வந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஏ.ஆர் முருகதாஸ் இதற்காக ஒவ்வொரு மொழியிலிருந்தும் பிரபல நடிகர்களை அழைத்து நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
அந்த வகையில் நடிகர் மோகன்லால், துப்பாக்கி பட வில்லன் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். இது குறித்த தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.