பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இலங்கையை சேர்ந்தவரான தர்ஷன் அங்கு புகழ்பெற்ற மாடலாக இருந்தார். 'மிஸ்டர்.ஸ்ரீலங்கன்' பட்டத்தையும் வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டில் பிரபலமானார். கூகுள் குட்டப்பா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்தார். இந்த நிலையில் அவர் தற்போது 'நாடு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சரவணன். ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளர். சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்ஷன் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சரவணன் கூறும்போது, “மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலையும் நகைச்சுவையாக சொல்லும் படம். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்வையும், அடிப்படைத் தேவைகளுக்குகூட அவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் சொல்லும் படம். முழுக்க முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது” என்கிறார்.