அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற தர்ஷன், பின்னர் சினிமாவில் அறிமுகமாகி கூகுள் குட்டப்பா, ஐத்தலக்கா படங்களில் நடித்தார். கடைசியாக 'காடு' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடித்து வரும் புதிய படம் 'யாத்ரீகன்'. ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் «வி.ஜி. தனலட்சுமி கோபாலன் தயாரிக்கிறார். சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரேம் நசீர் இயக்குகிறார். தர்ஷனுடன் மாளவிகா, காளி வெங்கட், ப்ராங்க்ஸ்டர் ராகுல், பானு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்கிறார், அபிஷேக் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரேம் நசீர் கூறும்போது “நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சில கிரிமினல் சம்பவங்களின் பின்னணியில், எமோஷனல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது 'யாத்ரீகன்'.
இரண்டு வெவ்வேறு நபர்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு சித்தாந்தங்களைப் பற்றியது. ஒரு மர்மமான நிகழ்வு அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு பிணைக்கிறது என்பது படத்தின் மையக்கரு. இந்தக் கதையின் நாயகன் துறுதுறுவென எனர்ஜியுடன் தேவை எனும்போது பிக்பாஸ் தர்ஷன் அதற்கு சரியான தேர்வாக இருந்தார். ஏனெனில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது” என்றார்.