பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
குறும்படங்களில் நடித்து வந்த விஜய் கவுரிஷ், அமலா பால் நடித்த 'கடாவர்', பிரபு தேவா நடித்த 'பகீரா', வெற்றி நடித்த 'ஜோதி' படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது அடுத்த வருடம் வெளியாக இருக்கும் "ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்" என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனின் உதவியாளர் எஸ்.எஸ்.முருகதாசு இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்து 'வெள்ளி மேகம்' என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
“பெரிய சினிமா கனவுகளுடன் வந்தேன். அந்த கனவு நிறைவேற சில ஆண்டுகள் ஆகியிருக்கிறது. பொறுமையுடனும், நேர்மையுடனும் இருந்ததற்கு பரிசாக இப்போது ஹீரோவாக நடிக்க தொடங்கி இருக்கிறேன். இயக்குனர்களின் நடிகன் என்ற பெயரை பெற வேண்டும் என்பதே என் விருப்பம்” என்கிறார் விஜய் கவுரிஷ்.