சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்திருந்தது. ஆனால், கடந்த வாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நடித்தார். தீபாவளி இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த வாரம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இது 'இந்தியன் 3'க்கான படப்பிடிப்பு என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், 'இந்தியன் 2'க்காகத்தான் தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.
'இந்தியன் 3' என இன்னொரு பாகத்தை கூடுதலாக வெளியிடலாம் என திட்டமிட்டபின் படத்தொகுப்பை முடித்து பார்த்த பிறகு இரண்டாம் பாகத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளில் சிலவற்றை சேர்த்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்களாம். அதற்காகத்தான் இப்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம். அத்துடன் 'இந்தியன் 3'க்கான ஒரு 'லீட்' காட்சியை இரண்டாம் பாகத்தில் சேர்க்கவும், மேலும், அதற்கான டீசர், டிரைலர் ஆகியவற்றுக்காக சில காட்சிகளையும் படமாக்கி வருகிறார்களாம்.
2024ம் வருடத்திலேயே 'இந்தியன் 2, இந்தியன் 3' என வர உள்ளதால் அடுத்த ஆண்டில் கமல்ஹாசன் வசூல் சாதனை புரிவது நிச்சயம் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.