லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களுக்குப் பிறகு ரிஷி ரிச்சர்ட் நடிக்கும் படம் 'சில நொடிகளில்' மலேசியாவில் வசிக்கும் நடிகையும் ஆர்.ஜே.வுமான புன்னகை பூ கீதா, இந்தப் படம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கி உள்ளார். யாஷிகா ஆனந்த் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது.
படம் பற்றி இயக்குனர் வினய் பரத்வாஜ் கூறும்போது “கதை நாயகனான ரிஷி ரிச்சர்ட் லண்டனில் காஸ்மெட்டிக் சர்ஜனாக இருக்கிறார். அவரது தோழி யாஷிகா ஆனந்த் அளவிற்கு அதிகமான போதை மருந்து உட்கொண்டு உயிரிழக்கிறார். இதனால் ரிச்சர்ட்டின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிறது. இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன, எதிர்பாராத திருப்பங்கள், தனது மனைவி மேதா வரதனிடம் (கீதா) இருந்து அவர் என்ன ரகசியங்களைப் பெற்றார், அவனது வாழ்வு மீண்டும் இயல்புக்குத் திரும்பியதா போன்ற கேள்விகளுக்கு இந்தப் படம் பதில் சொல்லும்” என்றார்.
இஷான் ராஜாதிக்ஷா, எல்லே நவ், ஸ்ரீனிவாஸ் காஷ்யப் மற்றும் இயக்குநர் வினய் பரத்வாஜ் ஆகியோர் இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்திருக்க, மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ மற்றும் ரோஹித் மாட் ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வருகிறது.