வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனின் 234வது படத்தில் இணைய உள்ளது. இப்படம் மல்டிஸ்டார் படமாக உருவாக உள்ளது. யார் யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
படத்தின் ஆரம்ப விழா புகைப்படங்களை மட்டும் வெளியிட்டிருந்தார்கள். நாளை மறுதினம் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகலாம் எனத் தெரிகிறது. அதற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளதாகவும் தகவல்.
அந்தப் படப்பிடிப்பில் கமல்ஹாசன், மணிரத்னம் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை படத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதனால், அந்த அறிமுக வீடியோ வெளியாவது உறுதி ஆகியுள்ளது.