லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛ஜிகர்தண்டா'. இதன் இரண்டாம் பாகம் தற்போது ‛ஜிகர்தண்டா : டபுள் எக்ஸ்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவ., 10ல் படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். முதல்பாகத்தை விட மிரட்டலான மேக்கிங் காட்சிகள் இருப்பது டிரைலரில் தெரிகிறது. அதற்கு பக்கபலமாய் சந்தோஷ் நாராயணனின் இசையும் உள்ளது. இதுவும் சினிமா கதைக்களத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது. படத்தின் கதைக்களம் 1975ல் நடப்பது போன்று எடுத்துள்ளனர். கருப்பு ஹீரோவாக கேங்ஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இயக்குனராக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தாதாயிசம், சினிமா, அரசியல் ஆகியவற்றை கலந்து இதன் திரைக்கதை இருக்கும் என தெரிகிறது. தற்போது இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.