டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

‛மீசையை முறுக்கு' பட நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றனர். இப்படத்தில் 'பக்கோடா' என்கிற முதல் சிங்கள் பாடலை ஹிப்ஹாப் ஆதி பாடியுள்ளார். இதை நாளை நவம்பர் 3ம் தேதி அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.




