டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் படத்தின் நாயகி த்ரிஷா பேசியதாவது : ‛‛லியோ படத்தின் கதையை 2 ஆண்டுகளுக்கு முன்பே லோகேஷ் கனகராஜ் சொன்னார். இரண்டரை மணி நேரம் அவர் சொன்ன கதை எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்போது அந்த கதையை எப்படி சொன்னாரோ அதையேதான் இப்போதும் எடுத்தார்.
விஜய்யோடு நான் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன். எனது கேரியரில் நான் அதிகம் பயணப்பட்டது விஜய்யோடு தான். அவரது அமைதிதான் அவரது வெற்றிக்கு காரணம்.
என்னை சந்திப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் என்னோடு தொடர்பில் இருப்பவர்கள் விஜய்யுடன் எப்போது மீண்டும் நடிப்பீர்கள் என்று கேட்டு கொண்டே இருந்தனர். இப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் நடித்திருக்கிறோம். அதுவும் ஒர் அவுட் ஆகியிருக்கு. நடிகைகளுக்கு அப் அண்ட் டவுன் இருக்கும். எல்லா நேரத்திலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் அப்படி இருப்பது தான் நிலைத்து நிற்பதற்கும் காரணம்,'' என்றார்.




