மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' |

ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியவர் சிறுத்தை சிவா. தெலுங்கில் கோபிசந்த் நடித்த சௌர்யம் என்ற படத்தில் இயக்குனரானவர், தமிழில் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை முதன்முதலாக இயக்கினார். அதன் பிறகு அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இதில் வீரம், விஸ்வாசம் என்ற இரண்டு படங்களும் ஹிட் அடித்தன. அதையடுத்து அண்ணாத்த படத்தை இயக்கியவர், தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்குமார் அந்த படத்தை முடித்ததும் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில், கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிறுத்தை சிவாவிடத்தில், அப்படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எந்த பதிலும் சொல்லாமல், அனைவரையும் பார்த்து கையெடுத்து ஒரு கும்பிடு போட்டு விட்டு கிளம்பிவிட்டார். இதை வைத்து பார்க்கும்போது, தற்போதைக்கு அஜித்தும், சிறுத்தை சிவாவும் இணைவதற்கு வாய்ப்பில்லை என்பது தெரிகிறது.




