Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி சக்ரவர்த்தி!

29 அக், 2023 - 06:13 IST
எழுத்தின் அளவு:
cibi-chakravarthy-to-direct-Sivakarthikeyan-after-Nani!

சிவகார்த்திகேயன் நடித்த டான் என்ற படத்தை இயக்கியவர் சிபி சக்ரவர்த்தி. இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. அதையடுத்து ரஜினியை சந்தித்து அவர் கதை சொன்னதால் அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததால் அந்த முயற்சி நடைபெறவில்லை. இதனால் மீண்டும் அவர் சிவகார்த்திகேயனிடமே சென்றார்.

ஆனால் அவரோ, தனது கைவசம் இரண்டு படங்கள் இருப்பதாக சொன்னவர், அந்த படங்கள் முடிந்த பிறகு நாம் இணையலாம் என்று வாக்குறுதி கொடுத்தார். அதனால் இன்னும் இரண்டு படங்களை முடித்து விட்டுதான் அவர் தனக்கு கால்சீட் தருவார் என்பதால் அந்த இடைவெளியில் ஒரு படத்தை இயக்க, தெலுங்கு நடிகர் நானியிடம் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார் சிபி சக்ரவர்த்தி. தற்போது அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படம் குறித்த கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட சிறுத்தை சிவா!அஜித் படம் குறித்த கேள்விக்கு ... கைதி - 2 எப்போது? லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில் கைதி - 2 எப்போது? லோகேஷ் கனகராஜ் சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)