காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கடந்த 2011ம் ஆண்டில் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த படம் 'சிறுத்தை' . இத்திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த 'விக்ரமாகுடு' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். இந்த படத்தின் மூலம் தான் சிறுத்தை சிவா இயக்குனராக அறிமுகமானார்.
இதன் பிறகு இவர் இயக்கத்தில் வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற வெற்றி படங்கள் வெளியானது. தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'கங்குவா' படத்தினை இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா 13 வருடங்கள் கழித்து மீண்டும் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.