மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் | பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் |
கமல் 234 பூஜையுடன் ஆரம்பம் : ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்
‛இந்தியன் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள கமல் அடுத்தடுத்து கைவசம் படங்கள் வைத்துள்ளார். இந்தியன் 2வை முடித்த பிறகு வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார். அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்க போகிறார். கமல் பிறந்தநாளை முன்னிட்டு கமல் 234 படத்தின் அறிமுக வீடியோ வெளியாக உள்ளது. இதனிடையே நேற்று இந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. அதன் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
அதில் படத்தின் பூஜையோடு படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றியும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன் பணியாற்ற, எடிட்டிங் பணியை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். சண்டை பயிற்சியை அன்பறிவ் மாஸ்டர்கள் மேற்கொள்கின்றனர். இந்த படத்தை கமலின் ராஜ்கமல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்குகிறது.