பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! |
தமிழ் சினிமாவில் 'மைனா' படம் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை அமலா பால். அதன்பின் “தெய்வத் திருமகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, வேலையில்லா பட்டதாரி 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இரண்டு வருடங்களிலேயே இருவரும் விவகாரத்து செய்துவிட்டனர். அமலா பாலுக்கும் பாடகர் பவிந்தர் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. பவிந்தர் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து பின்னர் அதை 'டெலிட்' செய்துவிட்டார்.
தற்போது ஜகத் தேசாய் என்பவர் இன்ஸ்டா தளத்தில் அமலா பாலுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “என்னுடைய ஜிப்ஸி குயின் 'சரி' என்று சொல்லிவிட்டார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை லவ்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அமலா பாலின் பிறந்தநாள். அதனால் பிறந்தநாளில் ரெசார்ட் ஒன்றில் அமலாபாலுக்கு பார்ட்டி கொடுத்த ஜெகத் தேசாய் சர்ப்ரைஸாக தனது காதலையும் வெளிப்படுத்தினார். அமலாபாலும் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்ள இருவரும் முத்தம் கொடுத்து கொண்டதோடு மோதிரமும் மாற்றிக் கொண்டார். இதுதொடர்பான வீடியோவை அமலாபால் இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.
இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.