அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் அருந்ததி கதையின் நாயகி யார் தெரியுமா? | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு | நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்படம் டைம் ட்ராவல் கதையில் உருவாகி வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த படத்தில் விஜய் 25 மற்றும் 50 வயது என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படுகிறது. டைம் டிராவல் மூலம் காலம் கடந்து செல்லும் போது இளமையான விஜய் தோன்றுவதற்காக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காகத்தான் அமெரிக்கா சென்று ஸ்கேனிங் ப்ராசஸில் விஜய் ஈடுபட்டிருந்தார். அதையடுத்து தான் சென்னை திரும்பி அவர்கள் படப்பிடிப்பை தொடங்கினார்கள். அதோடு, விஜய் இளமையாக தோன்றும் பாடலைதான் முதல் நாள் படமாக்கினார்கள். ஏற்கனவே சிம்புவை வைத்து டைம் லூப் முறையில் மாநாடு படத்தை இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. அந்த படம் வெற்றி பெற்ற நிலையில், தற்போது டைம் டிராவலை மையமாக வைத்து விஜய்- 68 வது படத்தை இயக்கி வருகிறார் .