ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
'லியோ' படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து அவை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போயின. இப்போது அடுத்த சர்ச்சை ஒன்று புதிதாக எழுந்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற 'ஆர்டினரி பர்சன்' என்ற பாடலின் லிரிக் வீடியோ நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது.
அப்பாடல் பல்கேரிய நாட்டின் ஓட்னிக்கா என்ற இசைக்கலைஞரின் இசையில் உருவான 'வேர் ஆர் யு' என்ற பாடலின் அப்பட்டமான காப்பி என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இது குறித்து அவர்கள் ஓட்னிக்காவின் சமூக வலைத்தளத்திலும் அவரை டேக் செய்திருந்தனர்.
அதற்கு ஓட்னிக்கா, “நண்பர்களே, 'லியோ' படத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான மெசேஜ்கள் வந்துள்ளன. நான் எல்லாவற்றையும் பார்க்கிறேன், இருப்பினும் அனைத்திற்கும் பதிலளிக்க முடியாது. மெயில், மெசேஜ்கள், இன்ஸ்டாகிராம், யு டியூபில் 'வேர் ஆர் யு' வீடியோ கீழ் ஆயிரக்கணக்கான கருத்துகளால் நிரம்பி வழிகிறது. நிலைமை மிகவும் தெளிவாக இல்லை. நாங்கள் இதைப் பார்க்கிறோம். பின்னர் இது குறித்து மதிப்பிட்டுக் கூறுகிறேன். ஆனால், நான் இதுவரை யாரையும் குற்றம் சொல்லவில்லை.
முக்கியமான ஒன்று, 'ஓட்னிக்கா-வேர் ஆர் யு' பாடலில் இசையமைப்பாளர் ஆர்டெம் மிஹேன்கினுக்கும் பங்குண்டு,” என்று குறிப்பிட்டுள்ளார்.