ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நடிகர் லிவிங்ஸ்டன் 90களில் வில்லனாக அறிமுகமாகி அதன்பிறகு கதாநாயகனாக, குணசித்திர நடிகராக என தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் லிவிங்ஸ்டன். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் ரஜினியும் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக 90களில் வீரா படத்தில் ரஜினியுடன் நடித்த லிவிங்ஸ்டன், அதன்பிறகு சிவாஜி, பின்னர் அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார் லிவிங்ஸ்டன். பொதுவாக ரஜினிகாந்தின் நட்பு வட்டாரத்தில் உள்ள நடிகர்கள் அல்லது அவரது படங்களின் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகர்கள் மரியாதை நிமித்தமாக அவரிடம் நேரம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பது உண்டு. ஆனால் நடிகர் லிவிங்ஸ்டனை ரஜினியே தனது கடந்த வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து அவரை வரவேற்று உபசரித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “இந்த நாள் என் வாழ்க்கையில் நினைவில் வைத்து பாதுகாக்கும் ஒரு மறக்க முடியாத நாள். ஆம்.. சூப்பர் ஸ்டாரே என் தந்தையை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்பாவுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். இன்று எனக்கு படப்பிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் எப்படியாவது என் தந்தையிடம் கெஞ்சி, நானும் அவரை சந்திக்க வருகிறேன் என கிளம்பி இருப்பேன். ரஜினி சாரின் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு நாள் விரைவில் அவரை சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.




