பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் |
நடிகர் சிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் கார்த்தி. தனது முதல் படமான பருத்திவீரன் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்த 16 வருடங்களாக வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இப்போது அவர் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான 25வது படமாக 'ஜப்பான்' படத்தில் நடித்துள்ளார். இதனை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஆனால், இது இசை வெளியீட்டு விழா மட்டும் அல்லாமல் கூடுதலாக கார்த்தி 25 படங்களில் நடித்ததற்காக பாராட்டு விழா ஆகவும் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம் கலந்து கொள்கிறார். மேலும் கார்த்தியை வைத்து இதுவரை படம் இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரையும் அழைத்து இவ்விழாவில் கலந்து கொள்ள வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.