போலீஸ் ஸ்டேஷக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் | 'மதராஸி' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா |
நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் பான் இந்தியா படம் 'ஹாய் நான்னா'. தந்தை மகளுக்கு இடையிலான உறவை சொல்லும் படம். இதில் மகளாக கியாரா கண்ணா நடிக்கிறார். மகளுக்காகவே வாழும் நானியின் வாழ்க்கைக்குள் மிருணாள் தாக்கூர் வரும்போது என்னென்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஷௌர்யுவ் இயக்கி உள்ளார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் அப்துல் வஹாப்பின் இசையில் படம் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா படமாக வருகிற டிசம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் மிருனாள் தாக்கூர் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். 2 நிமிட டீசரிலேயே 3 லிப் லாக் முத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. “படம் முழுக்க ஏராளமான முத்தக் காட்சிகள் இருக்கிறது. ஆனால் அது அன்பை வெளிப்படுத்துதாக இருக்கும்” என்று இயக்குனர் ஷெளர்யுவ் விளக்கமளித்துள்ளார்.