Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் லியோ பிரிமியர் காட்சிகள் ரத்து! முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பி தரப்படுகிறது!

15 அக், 2023 - 03:13 IST
எழுத்தின் அளவு:
LEO-Premieres-USA:-Thalapathy-Vijay's-IMAX-Premiere-Show-Cancelled-and-Refunded

விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. மேலும், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதமே வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது. விஜய்க்கு அதிக அளவு ரசிகர் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 6 வாரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. ஆனால் ரிலீஸ்க்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் அமெரிக்காவில் லியோ படத்தின் பிரிமியர் காட்சிகளை ரத்து செய்துள்ளார்கள்.

லியோ படத்தை அனுப்புவதற்கு காலதாமதம் ஆனதால் அங்குள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிட இருந்த பிரிமியர் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறதாம். அதன் காரணமாக, பிரிமியர் காட்சிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பி உள்ளார்களாம். என்றாலும் ஐமேக்ஸ் இல்லாத தியேட்டர்களில் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்படி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்த்து விட்டன. என்றாலும் சென்னையில் உள்ள இன்னும் சில திரையரங்குகளில் லியோ டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமலேயே உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யை இம்ப்ரஸ் பண்ணிய ரஜினி 171 வது படத்தின் கதை! - லோகேஷ் கனகராஜ்விஜய்யை இம்ப்ரஸ் பண்ணிய ரஜினி 171 வது ... இந்தியா - பாக்., போட்டி: மைதானத்தில் வந்தே மாதரம் பாடிய நடிகர் சதீஷ் இந்தியா - பாக்., போட்டி: மைதானத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)