நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' | புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? |
படிப்பதற்கு கண் இருந்தால் போதும்... ஆனால் கவிதைகளை படைக்க உள்நோக்கிய பயணம் தேவை என்கிறார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. சேலம் வீராணம் சின்னனுார் கிராமத்தில் பிறந்தவர் கார்த்திக் நேத்தா. தற்போது சென்னையில் குடியேறியுள்ளார்.
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் நேத்தா, தமிழ்த் திரைப்படங்களில் பாடலாசிரியராக துவங்கினார். 96, நெடுஞ்சாலை, திருமணம் எனும் நிக்காஹ், நையாண்டி, போன்ற பல வெற்றித் திரைப்படங்களுக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 2018ல் 'சிறந்த பாடலாசிரியர் விருது' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் கவிஞர் கார்த்திக் நேத்தா. அவர் அளித்த பேட்டி..
எழுத்து ஆர்வம் எப்படி வந்தது...
பள்ளிப் பருவ காதலில் தான் முதல் கவிதை எழுதினேன். அது தமிழ் மீது ஆர்வமாக தொற்றிக் கொண்டது. பல புத்தகங்களை படிக்கத் துாண்டியது. அப்படித்தான் எழுத்து ஆர்வம் பிறந்தது.
நா.முத்துக்குமாரின் அறிமுகம் குறித்து...
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நான் எழுதிய படபட... பாடலில் கொடியில் காயும் கோவணம் கூட வானவில்லாய் தெரியுதே என்ற வரிகள் நா.முத்துக்குமாரை ஈர்த்தது. உடனே என்னை அழைத்தார். அப்படித்தான் அறிமுகமானோம். அவர் எனக்கு சிறந்த குரு. அவரின் இழப்பு ஈடுகட்ட முடியாதது. படிப்பதற்கு கண் இருந்தால் போதும். கவிதை, பாடல்களை எழுதுவதற்கு உள்நோக்கிய பயணம் தேவை. அதை நா.முத்துக் குமாரிடம் உணர்ந்தேன்.
96 பட பாடல்கள் வெற்றி குறித்து...
பேரன்பே காதல்! அதை வெளிக்கொண்டு வர எடுத்த முயற்சி தான் 96 படப் பாடல்களின் வெற்றி. அதில் இசைக்கு பாடல் எழுதினேன்.
கவிதை, பாடல் எது கடினம்...
கவிதை எளிது, ஆழமாக, சுதந்திரமாக கருத்துக்களை சொல்லும் பரந்த எண்ணங்களில் எழுதலாம், ஆனால் பாடல்கள் எழுத சிந்திப்பது கடினம். கதை, இசைக்குள் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அம்மா குறித்து எழுதிய பாடல் பற்றி..
அன்னை இல்லாமல் அகிலமே இல்லை. சினம் எழும்போது தாய் முகம் பார்த்தால் மனம் ஆறும். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரித்தானது தாய்மை. அதனை போற்றுவது நமது கடமை.
யாருடன் பணிசெய்ய விருப்பம்...
இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் அதிகமாக பாட்டெழுதி உள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.