ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகப் பட குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி, காலை 7, 8, 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் பல்வேறு முறைகளில் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதனால் மாற்றுத்திட்டத்தை படக்குழு யோசித்தது. பட வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18ம் தேதியன்றே பிரிமீயர் காட்சிகள் என்ற பெயரில் இரவு 7 மணி, 9 மணி, 11 மணி என சிறப்புக் காட்சிகளை நடத்தலாமா என பேசி வருவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் லியோ திரைப்படம் காலையிலேயே முதல் காட்சி திரையிடப்படும். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.