ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அப்படம் 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வருவதாகத் தெரிகிறது.
இதுவரை வேறு எந்தப் ஹிந்திப் படத்திலும் நடிக்க நயன்தாரா சம்மதிக்கவில்லையாம். அதே சமயம் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்க உள்ள 'பைஜு பாவ்ரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நயன்தாரா நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்கும் படம் இது.
'ஜவான்' படத்திற்குப் பிறகு ஹிந்தி ரசிகர்களுக்கும் பிடித்த கதாநாயகியாக நயன்தாரா மாறியுள்ளார். முக்கியப் படம் என்பதால் அவர் இப்படத்தில் நடிக்க சம்மதிக்கலாம் என்றே சொல்கிறார்கள்.