அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். இந்த ஒரே படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்த கவுரி கிஷன் தொடர்ந்து சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‛அடியே' திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக கதாநாயகியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார் கவுரி கிஷன்.
இன்னொரு பக்கம் மலையாளத்திலும் கவனம் செலுத்தி நடித்து வரும் கவுரி கிஷன் தற்போது ‛லிட்டில் மிஸ் ராவுத்தர்' என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை விஷ்ணு தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை எழுதி உள்ள செர்ஷா ஷெரீப் என்பவர் இந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
6.2 அடி உயரமுள்ள சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரியும் கதாநாயகனுக்கும் வசதியான குடும்பத்தை சேர்ந்த 5 அடி உயரம் உள்ள கதாநாயகிக்கும் இடையே ஏற்படும் காதலும் அது சார்ந்த பிரச்னையும் தான் இந்த படத்தின் கதை. கடந்த அக்டோபர் 6ம் தேதியே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப்போய் வரும் அக்டோபர் 12ம் தேதி ரிலீசாக இருக்கிறது.