ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்புத் தளங்களில் இருக்கும் போதுஅவர்கள் மேக்கப் போடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் உள்ள நடமாடும் கேரவன் வண்டி இருக்கும். ஒரு மினி பஸ் போல் இருக்கும் அதில் இரண்டு அறைகள் கொண்டதாகவோ அல்லது ஒரு அறை கொண்டதாகவோ இட வசதி இருக்கும். அதில் மேக்கப் போடும் இடம், உட்கார்ந்து பேசும் இடம், படுக்கை அறை, பாத்ரூம் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.
ஒரு காலத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகியோருக்கு மட்டும் அப்படிப்பட்ட கேரவன்கள் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. போகப் போக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஆகியோருக்கும் அந்த வசதியைக் கொடுத்து வருகிறார்கள்.
நடிகர் சூரி நேற்று படப்பிடிப்பில் இருந்த போது சிறுவர்கள், சிறுமியர்கள் பலரும் அந்த கேரவன் வாகனத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்து மகிழ்ந்தார் சூரி. மேலும், அவர்களை நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் வாழ்த்தி அனுப்பினார். கேரவனைப் பார்த்த மகிழ்ச்சியில் குட்டீஸ்கள் சந்தோஷமாக வெளியே வந்தார்கள்.