பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
நான்கு மொழிகளிலும் சேர்த்து தற்போது 51 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது இந்த டிரைலர். தமிழில் 36 மில்லியன், ஹிந்தியில் 9 மில்லியன், தெலுங்கில் 6 மில்லியன், கன்னடத்தில் 7 லட்சம் என இப்படத்திற்கு மொத்தமாக 51 மில்லியன் பார்வைகள் இரண்டே நாட்களில் கிடைத்துள்ளது. தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எதிர்பார்த்ததை விடவும் வரவேற்பு அதிகமாகி உள்ளது.
விஜய் பட டிரைலர்களில் இதுவரையில் வந்த படங்களில் 'பீஸ்ட்' டிரைலர் 63 மில்லியன்களைப் பெற்று அவரது படங்களின் டிரைலர்களின் பார்வையில் முதலிடத்தில் உள்ளது. அதே சமயம் அஜித் நடித்துள்ள 'துணிவு' டிரைலர் 66 மில்லியன் பார்வைகளுடன் தமிழ்ப் படங்களின் டிரைலர்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை 'லியோ' முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடத்தில் உள்ளது.




