போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
பைக்கில் சாகசம் செய்து அந்த வீடியோவை தனது யு டியூப் சேனலில் வெளியிட்டு வந்தவர் டிடிஎப் வாசன். இதனால் அவரது சேனலை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர் மீது பல வழக்குகள் உள்ளன. சினிமாவில் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் ஹீரோவாகவும் இவர் நடிக்கிறார்.
கடந்த மாதம் சென்னையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றார். அப்போது சாகசம் செய்ய முயன்றபோது விபத்து நடந்தது. இதில் அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மோட்டார் சைக்கிளை வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதாக டி.டி.எப். வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவரை கடந்த செப்டம்பர் 19ந்தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு முறையிட்டு வருகிறார் வாசன். சென்னை, ஐகோர்ட்டில் இந்த வழக்கு வந்தபோது, ''மனுதாரரின் யு-டியூப் சேனலை மூடிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளை எரித்து விடலாம்” என்று நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்தார். அதோடு அவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையே இவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் இப்போது அவரின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.