வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆக் ஷன் படம் ‛லியோ'. அக்., 19ல் படம் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீடு நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விழா ரத்தானது.
இந்நிலையில் இன்று(அக்.,5) மாலை 6:30 மணியளவில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். முழுக்க முழுக்க ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது என டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. 2:43 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில் பார்த்தி எனும் விஜய், மனைவி திரிஷா மற்றும் மகளுடன் காஷ்மீரில் வசிக்கிறார். அவரை கொல்ல சஞ்சய் தத், அர்ஜூன் கூட்டம் துரத்துகிறது. எதற்காக இவர்கள் துரத்துகிறார்கள் என்பது படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.
டிரைலரில் ஒரு காட்சியில் விஜய், ‛‛எவனோ ஒரு இந்த பையன்(கெட்டவார்த்தை) என்னை மாதிரி இருக்கான் என்பதற்காக ஆளாளுக்கு என்ன போட்டு உயிர எடுத்தா நான் என்னடி பண்ணுவேன்...'' என த்ரிஷாவிடம் கோபமாக பேசுகிறார். இதை வைத்து பார்க்கையில் படத்தில் லியோ, பார்த்தி என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பார் என தெரிகிறது. அல்லது ஒரு விஜய்யே இரண்டு விதமான கதாபாத்திரங்களிலோ இல்லை அண்டர் காப் போலீசாக தோன்றலாம் என தெரிகிறது. இருப்பினும் படம் வெளியான பின்பே இது முழுமையாக தெரிய வரும்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ‛லியோ' டிரைலர் இருப்பதால் அதனை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆக்ஷன், சென்ட்டிமென்ட் என இரு முகங்களை காட்டி உள்ளார் விஜய். அதோடு டிரைலரில் விஜய் மட்டுமல்லாது திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், மன்சூரலிகான், மிஷ்கின் உள்ளிட்டோரும் ஓரிரு காட்சிகளில் இடம் பெறுவது போன்று கட் செய்துள்ளனர். டிரைலர் வெளியான 5 நிமிடத்திலேயே 10 லட்சம் பார்வைகளை கடந்த இந்த டிரைலர் வைலாகி டிரெண்ட் ஆனது.
தியேட்டர்களில் டிரைலர் வெளியீடு
லியோ படத்தின் டிரைலரை பொது வெளியில் திரையிட அனுமதி கோரி சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் நிர்வாகம் போலீஸிடம் அனுமதி கோரியது. முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தியேட்டருக்குள் திரையிட அனுமதி வழங்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் மாலை முதல் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். தியேட்டரில் டிரைலர் வெளியிட்டபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர்.
டிரைலரில் கெட்டவார்த்தை
சமீபகாலமாக படத்தின் டிரைலரில் கெட்ட வார்த்தை இடம் பெறுவது அதிகமாகி வருகிறது. லியோ டிரைலரிலும் 1:47 நிமிடத்தில் விஜய் ஒரு கெட்ட வார்த்தை பேசி உள்ளார். இது சர்ச்சையாகி உள்ளது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் லியோ படம் அக்., 19ல் வெளியாகிறது.