நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கென்று தனி வாட்ஸ் அப் குரூப் உள்ளது. அதேபோல சில தயாரிப்பாளர்கள் தனியாக வாட்ஸ் அப் குரூப் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த குரூப்புகளில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பற்றியும், சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் குறித்து தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வாட்ஸ் அப் அட்மின்கள் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறு பரப்பும் உறுப்பினர்களோடு மற்ற உறுப்பினர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.