வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் சினிமா உலகில் தாங்கள் நடிக்கும் படங்களின் எந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வராதவர்களில் முதலிடம் பெறுபவர் நயன்தாரா. சமூக வலைத்தளங்கள் பக்கம் வராமல் இருந்தவர் திடீரென இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய கணக்கை ஆரம்பித்தார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷனை அதில் செய்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.
அவர் நடித்த முதல் ஹிந்திப் படமான 'ஜவான்' படத்திற்காக மட்டும் ஐந்தாறு பதிவுகளைப் போட்டார். அதே சமயம் அவர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'இறைவன்' படத்திற்காக போனால் போகிறதென்று ஒரே ஒரு பதிவை மட்டும் போட்டிருந்தார். மற்றபடி அவர் இன்ஸ்டாகிராம் தளத்தை ஆரம்பித்திருப்பது அவரது சொந்த நிறுவனத்தின் புரமோஷனுக்காகத்தான் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
மலேசியாவில் நடைபெற்ற அவரது கம்பெனியின் ஆரம்ப விழாவுக்கு கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார். நயன்தாரா அவரது நிறுவனத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தவறில்லை. அது போல அவர் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கும் கலந்து கொள்ள வேண்டும் என திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.