'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
துபாய் சென்றிருந்த ஸ்ருதிஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை திரும்பினார். அப்போது அவரை ஒரு மர்ம நபர் பின் தொடர்ந்து வந்துள்ளார். ஸ்ருதியுடன் நெருக்கமாக நடந்து வரவும், அவருடன் பேசவும் முயற்சி செய்தார். நீங்கள் யார் என்னை ஏன் பின் தொடர்கிறீர்கள், உங்களை எனக்குத் தெரியாது என்று கூறிவிட்டு வேகமாக அவரிடமிருந்து நகர்ந்து ஓடிவந்த ஸ்ருதிஹாசன், அங்கு நின்றிருந்த புகைப்படக்காரர்களை பார்த்து, 'என்னை பின்தொடர்ந்து வரும் அந்த நபர் யார்?” என்று கேட்டார். அதற்கு புகைப்படக்காரர்கள், 'அந்த நபர் குறித்த விவரங்கள் தெரியவில்லை' என்றனர்.
இது தொடர்பான வீடியோவை புகைப்படக்காரர் பயானி வெளியிட்டுள்ளார். அதில், 'ஸ்ருதி துபாயிலிருந்து மும்பை விமான நிலையத்துக்குள் நுழைந்ததும் அந்த நபர் அவரை பின்தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து ஸ்ருதியிடம் பேச முயல்கிறார். ஸ்ருதி அவரை புறக்கணித்து சென்றாலும் பின்தொடர்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ருதி ஹாசனை பின்தொடர்ந்த நபர் யார் என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளார். அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது “என்னை பின்தொடர்ந்து வந்த நபர் யார் என்று தெரியாது. விமான நிலையத்தில் நடந்து சென்றபோது அவர் என் பின்னால் வருவதை கவனித்தேன். எனக்கு மிகவும் நெருக்கமாக அவர் வந்ததால் அசவுகரியமாக இருந்தது. இதனால் வேகமாக நடந்து வெளியே வந்தேன். காரில் ஏறுவது வரை தொடர்ந்து வந்தார். நான் பயந்து போனேன்.
நீங்கள் யார் என்று சத்தமாக கேட்டேன். உடனே நழுவி சென்று விட்டார். எனக்கு சொந்தமாக பவுன்சர்கள் வைத்துக் கொள்ளவில்லை. சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன். அதனால்தான் இப்போது வரை பாதுகாப்புக்கு பாடிகார்டுகள் இல்லாமல் இருக்கிறேன். இந்த சம்பவத்துக்கு பிறகு பாடிகார்டு வைத்துக்கொள்ள வேண்டுமோ? என யோசிக்கிறேன்'' என்றார்.